முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்ட குற்றச்சாட்டில் அசாத் சாலி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அசாத் சாலி மீது பயங்கரவாத தடைச் சட்டம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சர்வதேச உடன்படிக்கையின் கீழ் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.
உயர் நீதிமன்றத்தில் அசாத் சாலியின் அடிப்படை உரிமை மீறல் மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி திலீப பீரிஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அநியாயமாகக் கைது செய்யப்பட்டுள்ள தன்மை விடுவிக்குமாறு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அசாத் சாலியின் அடிப்படை உரிமை மீறல் மனு மீண்டும் ஜூலை மாதம் 29 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.