May 2, 2025 22:37:34

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டன!

Lockdown or Curfew Common Image

கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக இலங்கையின் இரண்டு மாவட்டங்களில் சில பிரதேசங்கள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நொரகல்ல கிராம சேவகர் பிரிவின் நொரகல்ல மேல் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்புச் செயலணி தெரிவித்துள்ளது.

அத்துடன் அந்த மாவட்டத்தில் யக்தெஹிவத்த கிராம சேவகர் பிரிவின் பின்கந்த 1 மற்றும் பின்கந்த 2 ஆகிய பகுதிகளும் பாதகட கிராம சேவகர் பிரிவின் பின்கந்த 3 பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மொனராகலை மாவட்டத்தின் ஹிதிகிவுல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நக்கலவத்த கிராமம் மற்றும் மில்லகெலே வத்த கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்புச் செயலணியின் பிரதானி இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.