November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவை குறிக்கும் வகையில் நாணயம் வெளியிடவுள்ளது இலங்கை

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூறு வருட பூர்த்தியை முன்னிட்டு இலங்கையிலும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அடையாளத்தில் இலங்கை நாணயம் வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இவ்வாறு அச்சடிக்கப்படும் பணத்தின் பெறுமதியோ அல்லது வடிவமோ இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என மத்திய வங்கியின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூறு வருட பூர்த்தியை முன்னிட்டு எதிர்வரும் ஜூலை மாதம் 1 ஆம் திகதி சீனாவின் பீஜிங்கில் பாரிய விழாவொன்று நடைபெறவுள்ளது.இந்நிலையில் சீனாவின் நட்பு நாடுகள் அல்லது, சீன ஆதிக்கம் செலுத்தும் நாடுகளிலும் சீன கொம்யூனிச கட்சியின் நூறு வருட பூர்த்தியை கொண்டாடும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இதனை உறுதிப்படுத்த நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலிடம் வினவிய போது, அது குறித்த தீர்மானங்கள் தனக்கு தெரியாது எனவும், ஒரு பணம் அவ்வாறு அச்சடித்து நினைவுப்பரிசாக வழங்கப்படலாம் என்றும் தெரிவித்தார்.