இலங்கையில் திங்கட்கிழமை (28) முதல் 70 ரயில்களை இயக்க ரயில்வே திணைக்களம் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாகவும், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சமூக தூரத்தை கடைப்பிடிக்க பயணிகளுக்கு உதவுவதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அம்பேபுஸ்ஸ, மிரிகம, வெயாங்கொட மற்றும் கம்பஹாவிலிருந்து கொழும்பு கோட்டை வரையிலான பிரதான ரயிலில் 11 ரயில் சேவைகளும் கரையோரப் பாதையில் அலுத்கம, களுத்துறை தெற்கு, வாதுவ, பாணந்துறை,மொரட்டுவ மற்றும் கல்கிஸை ஆகிய பகுதிகளுக்கு 12 ரயில் சேவைகளும் இயக்கப்படவுள்ளன.
அவிசாவளை மற்றும் பாதுக்க இடையே களனி பாதையில் ஐந்து ரயில்களும் கொச்சிக்கடை மற்றும் நீர்கொழும்பு இடையே புத்தளம் வரை எட்டு ரயில் சேவைகளும் இயக்கப்படவுள்ளன.
காலையில் கொழும்பு கோட்டை மற்றும் மருதானையிலிருந்து ரயிலை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள அதேவேளை, கொழும்பு கோட்டை மற்றும் மருதானையிலிருந்து மாலை மீண்டும் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.