அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை இன்று சந்தித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் -வடமராட்சி, முள்ளி பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சேதனக் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை திறப்பு விழாவிற்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ சென்றிருந்த போது, ஆனந்த சுதாகரின் மகன் கவிரதன் மற்றும் மகள் சங்கீதா ஆகியோர் அவரை சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பின் போது தமது தந்தையை விடுதலை செய்யுமாறு அவர்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை அரசியல் கைதிகளின் உறவினர்கள் சிலரும் மற்றும் அண்மையில் விடுதலையான அரசியல் கைதிகளும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.