November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பணிக்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்க அரசாங்கம் தீர்மானம்

Sri Lanka Bureau of Foreign Employment official facebook

வெளிநாடுகளுக்கு பணிக்காக செல்லும் அனைவருக்கும் கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

தொழிலுக்காக வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொடுப்பதன் அவசியம் குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தி இருந்த நிலையில், கொவிட் தடுப்பூசி தேசிய குழுவினால் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு ஒப்பந்தம், விசா மற்றும் தொழில் தொடர்பான நியமன கடிதம் உள்ளிட்ட வெளிநாடு செல்வதற்கான ஆவணங்கள் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியும்.

தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள விரும்பும் வெளிநாடு செல்லவுள்ளவர்கள் அனுமதி பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் ஊடாகவும், ஏனையவர்கள் பணியகத்திற்கு தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டும் முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

இந்த தடுப்பூசி திட்டம் அடுத்த வாரம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், 1989 என்ற எண்ணுக்கு அழைத்து கூடுதல் தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.

தடுப்பூசி வேலைத்திட்டம் எதிர்வரும் வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், 1989 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் ஊடாக மேலதிக தகவல்களை  பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.