(Photo:msdw.gov.lk)
இலங்கையில், வன விலங்குகளிடையே அசாதாரண அறிகுறிகள் தென்பட்டால் அவற்றை அன்டிஜன் சோதனைக்கு உட்படுத்தி கொவிட் வைரஸ் தொற்று உள்ளதா என்பதை கண்டறிவது தொடர்பில் வனவிலங்கு மற்றும் வனத்துறை அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
இதற்காக ஒரு தொகை அன்டிஜன் சோதனை கருவிகள் வனவிலங்கு பாதுகாப்பு துறையிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக வனவிலங்கு மற்றும் வனத்துறை அமைச்சர் சி.பி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தெஹிவளை மிருகக் காட்சி சாலையில் இரண்டு சிங்கங்கள் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.