File Photo
இலங்கையின் மேல் மாகாணத்தில் சுகாதார ஒழுங்குவிதிகளை மீறி திறக்கப்பட்ட ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் பொலிஸார் சுற்றிவளைப்புகளை நடத்தியுள்ளனர்.
ஹோட்டல்கள், உடற்பயிற்சி நிலையங்கள், உடற்பிடிப்பு நிலையங்கள், நீச்சல் தடாகங்கள் உள்ளிட்ட 1318 இடங்களில் நேற்றைய தினத்தில் சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதன்போது அந்த இடங்களை நடத்திச் சென்ற 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அங்கிருந்த 605 பேர் எச்சரித்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் சுகாதார ஒழுங்குவிதிகளை மீறிய மேலும் 361 பேர் நேற்றைய தினத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.