July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் நடப்பது வத்திக்கானின் ஆட்சியா? :சிவசேனை அமைப்பின் தலைவர் கேள்வி

இலங்கையில் நடப்பது இலங்கை அரசின் ஆட்சியா அல்லது வத்திக்கானின் ஆட்சியா என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, இலங்கை கத்தோலிக்க முதல்நிலை குருவான கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, ‘இலங்கையில் ஒழுங்கான அரசாங்கம் நடைபெறவில்லை என்றும் இலங்கை அரசாங்கம் தோல்வி அடைந்துள்ளதும் என்று அண்மையில் தெரிவித்திருந்தார்.

இது ஒரு கொடுமையான கூற்று. கத்தோலிக்க மக்களுக்கு நடந்த உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் சம்பவம் ஒரு கொடுமையான நிகழ்வு தான். அதற்காக அரசு நீதியை நிலைநாட்டுவதற்கு செயல்படவில்லை என கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. அவருக்கு அந்த கேள்வியை கேட்பதற்கு அருகதை கிடையாது எனவும் சச்சிதானந்தன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வழிபாட்டு தலம் உடைக்கப்பட்டது இதுதான் முதல் தடவையா? அல்ல நானூற்று இருபது ஆண்டுகளுக்கு முன்பு திருக்கோணேச்சரம், திருக்கேதீச்சரம் ஆலயங்களை உடைத்தபோது நாம் மனித உரிமை அமைப்புக்கு போனோமா?

மன்னார் ஆயர் என்ன செய்கின்றார். திருக்கேதீஸ்வர வளைவு உடைக்கப்பட்டமைக்கு இதுவரை மன்னிப்பு கேட்டாரா? அரசை குறை சொல்வதற்கு கர்தினால் மெல்கம் ரஞ்சித்துக்கு என்ன தகுதியுள்ளது.

போப்பாண்டவரின் ஆணையை நிறைவேற்றும் கர்தினாலுக்கு இலங்கை அரசை விமர்சிப்பதற்கு தகுதி இல்லை எனவும் சச்சிதானந்தன் இதன்போது தெரிவித்துள்ளார்.