
மாகாணங்களுக்கு இடையே பொதுப் போக்குவரத்துச் சேவைகளை ஆரம்பிப்பதற்கு கொவிட் தடுப்புப் பிரிவு இதுவரையில் அனுமதி வழங்கவில்லை என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
நாடு பூராகவும் பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள போதும், மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.
இதனால் மாகாணங்களுக்கு இடையே பஸ் மற்றும் ரயில் சேவைகளை ஆரம்பிக்க அனுமதி கிடைக்கவில்லை என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த விடயம் குறித்து எதிர்வரும் நாட்களில் கொவிட் தடுப்புச் செயலணி கலந்துரையாடவுள்ளதாகவும், அதன்போது மாகாணங்களுக்கு இடையே போக்குவரத்தை ஆரம்பிப்பது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.