July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனுஷின் ஜகமே தந்திரம் படம் சாதித்துள்ள சாதனை

தனுஷ் நடிப்பில் வெளியான கேங்ஸ்டர் படமான ஜகமே தந்திரம் திரைப்படம் 7 நாடுகளில் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்திருக்கிறது.

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில்,சசிகாந்த் தயாரித்த ஜகமே தந்திரம் திரைப்படம் கடந்த 18 ஆம் திகதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்த திரைப்படத்தில் தனுஷுடன் ஐஸ்வர்ய லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், சௌந்தர்ராஜன், பாபா பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார்.இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் உலக தமிழர்களால், ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

ஜகமே தந்திரம் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்தப் படம் தனுஷின் நடிப்பிற்கு ஏற்ற படமில்லை எனவும் ,தனுஷ் நடிப்பில் முன்னர் வெளியிடப்பட்ட படங்களை ஒப்பிடும்போது, இப்படம் தரம் குறைவானது என பொதுவாக பேசப்பட்டது.

இந்த கொரோனா காலகட்டத்திலும் கூட ஜகமே தந்திரம் திரைப்படம் 190 நாடுகளில் 17 மொழிகளில் வெளியானது.

கேங்ஸ்டர் வகையில் எடுக்கப்பட்ட ஜகமே தந்திரம் திரைப்படம் தமிழகத்தில் கலவையான விமர்சனமே பெற்றிருந்தாலும் கூட தனுஷின் ரசிகர்கள் படத்தை கொண்டாடினர்.

இந்த நிலையில் ஜகமே தந்திரம் திரைப்படம் 12 நாடுகளில் அதிகம் பார்க்கப்பட்ட படங்களின் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் முன்னிலை பெற்று இருக்கிறது.

அதில் இந்தியா,மலேசியா, அரபு எமிரேட்ஸ் உட்பட 7 நாடுகளில் முதலிடத்தை பெற்று அதிகம் பார்க்கப்பட்ட படம் என்ற சாதனை படைத்துள்ளது.