May 23, 2025 20:38:25

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உலக சுகாதார ஸ்தாபனத்தின் புதிய வதிவிட பிரதிநிதி அலாகா சிங்- வெளியுறவு அமைச்சர் சந்திப்பு

இலங்கைக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் புதிய வதிவிட பிரதிநிதி கலாநிதி அலாகா சிங், வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கு இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

வெளியுறவு அமைச்சில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் புதிய வதிவிட பிரதிநிதிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை 1952 ஆம் ஆண்டு முதல் உலக சுகாதார ஸ்தாபனத்துடன் பேணி வரும் உறவுகளை வெளியுறவு அமைச்சர் நினைவுபடுத்தியுள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனம் கொவிட் தடுப்பு நடவடிக்கைகளில் இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்புகளுக்கு வெளியுறவு அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைக்கவுள்ளதாக கலாநிதி அலாகா சிங் தெரிவித்துள்ளார்.