இலங்கை அரசாங்கம் எதிர்கொள்ளும் சர்வதேச அழுத்தங்களைச் சமாளிப்பதற்காகவே தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை வழங்கப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் கைதிகள் 16 பேரின் விடுதலை என்பது இந்த அரசாங்கத்தின் மரண தண்டனைக் கைதி ஒருவரை விடுதலை செய்யும் வகையில் முலாம் பூசப்பட்ட விடயமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறைகளில் இருக்கின்ற அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிறிதரன் எம்.பி. கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகள் தமது எதிர்காலத்தைத் தொலைத்துவிட்டு பல வருடங்களாக சிறைகளில் வாழ்ந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த 16 பேரின் விடுதலைக்கு நடவடிக்கை எடுத்த அனைவரும் சிறிதரன் எம்.பி. நன்றி தெரிவித்துள்ளார்.