
இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பை எதிர்த்து எதிர்க்கட்சி கண்டியில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.
ஊழல் நிறைந்த அரசாங்கத்தின் தன்னிச்சையான ஆட்சிக்கு எதிராக தாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கண்டி மாவட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதாகவும், எரிபொருள் விலை குறைக்கப்பட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.