May 23, 2025 11:01:13

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பசில் ராஜபக்‌ஷவுக்கு பாராளுமன்ற ஆசனத்தை வழங்க ஆளும்கட்சி தேசிய பட்டியல் உறுப்பினர்கள் தயார்’

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்‌ஷவுக்கு பாராளுமன்ற ஆசனத்தை வழங்க ஆளும்கட்சி தேசிய பட்டியல் உறுப்பினர்கள் அனைவரும் தயாராக இருப்பதாக, கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.

கண்டி பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பசில் ராஜபக்‌ஷவுக்கு பாராளுமன்ற ஆசனத்தை விட்டுக்கொடுக்க தயாரா? என்று ஊடகவியலாளர் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டாரவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது, ஆளும் கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் அனைவரும் பசில் ராஜபக்‌ஷவுக்காக பாராளுமன்ற ஆசனத்தை விட்டுக்கொடுக்க தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பசில் ராஜபக்‌ஷ பாராளுமன்றம் நுழைவதாக வெளியாகும் செய்திகளில் உண்மைத்தன்மை இல்லை என்றும் அதுதொடர்பாக கலந்துரையாடுவதற்குரிய நேரம் இதுவல்ல என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.