May 28, 2025 12:09:07

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீசெல்ஸ் கடற்பரப்புக்குள் சட்ட விரோதமாக நுழைந்த இலங்கை மீனவர்கள் கைது!

Fishery Boats Common Image

சீசெல்ஸ் கடற்பரப்புக்குள் சட்ட விரோதமாக நுழைந்த இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சீசெல்ஸ் குடியரசின் வான் படை மற்றும் கடலோர பாதுகாப்பு பிரிவினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இலங்கையின் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு படகுகளில் சென்ற மீனவர்கள், சீசெல்ஸ் கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மே மாதம் வரை சீசெல்ஸ் கடற்பரப்பினுள் நுழைந்த இலங்கையின் 5 மீன்பிடி படகுகள் அந்நாட்டு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும் தடுத்து வைத்து, மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரியவருகின்றனது.