வாடிக்கையாளர் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அசேல சம்பத் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அஸ்ட்ரா செனிகா தடுப்பூசிகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் போலி செய்தி பரப்பிய குற்றச்சாட்டில் அசேல சம்பத் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தலைவர் மேற்கொண்ட முறைப்பாடு ஒன்றின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம், அடையாளம் தெரியாதோரால் தனது தந்தை கடத்திச் செல்லப்பட்டதாக அசேல சம்பத்தின் மகள் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.