January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கேகாலை மாவட்டத்தின் நான்கு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன

கேகாலை மாவட்டத்தின் நான்கு கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டதாக தேசிய கொரோனா தடுப்பு செயலணி தெரிவித்தது.

குறித்த பகுதிகளில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்தே, இவ்வாறு தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கேகாலை மாவட்டத்தின் மாவனல்லை, தெஹியோவிட மற்றும் கேகாலை பொலிஸ் பிரிவுகளில் உள்ள நான்கு கிராம சேவகர் பிரிவுகளே தனிமைப்படுத்தப்பட்டன.

ஹிங்குலோயா, மஹவத்த, டென்செவொத் வத்த மற்றும் ஹெலமட ஆகிய கிராம சேவகர் பிரிவுகளே தனிமைப்படுத்தப்பட்டன.

இதேநேரம், கம்பஹா மாவட்டத்தின் கிரிபத்கொட பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நாஹேன கிராம சேவகர் பிரிவில் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளது.