இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 260 கைதிகளின் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஏற்கெனவே நீதி அமைச்சரினூடாக ஜனாதிபதிக்கு முன்மொழிவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு 10 வருடங்களுக்கும் மேலாக தண்டனை அனுபவித்துவரும் 260 கைதிகளின் தண்டனையே ஆயுள் தண்டனையாக மாற்றப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பல்வேறுக் குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட 500 க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர் என்று சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் எம்.பி துமிந்த சில்வா உட்பட 93 கைதிகள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் நேற்றைய தினம் விடுதலை செய்யப்பட்டனர்.
இதனை தொடர்ந்து மஹர மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளின் கைதிகள் பலர் தமது தண்டனையை குறைக்குமாறு வலியுறுத்தி நேற்று முதல் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.