
வேறு பாடசாலைக்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து தேசிய பாடசாலை ஆசிரியர்களும் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் போது தமது நிரந்தர பணியிடத்தில் பணிக்கு திரும்ப வேண்டும் என கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக அநேகமான ஆசிரியர்கள் தங்களது நிரந்தர பணியிடத்திலிருந்து, தற்காலிகமாக வேறொரு பாடசாலைக்கு நியமிக்கப்பட்டதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும் மீண்டும் இதே பாடசாலையில் இணைப்புக் காலத்தை நீடிக்க விரும்பினால், தமது நிரந்தர பணியிடத்திலிருந்து அதிபரின் பரிந்துரையுடன் மீள விண்ணப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.