மன்னார் மாவட்டத்தில் மக்கள் கொரோனா சுகாதார நடை முறைகளை கடை பிடிக்கின்றார்களா? என்பதனை ஆராய்ந்து பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் அமைக்கப்பட்ட இளைஞர் குழு இன்றைய தினம் பணியை ஆரம்பித்துள்ளது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மேல் தலைமையில் குறித்த குழு ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அந்தக் குழு இன்றைய தினம் தமது பணியை ஆரம்பித்தது.
குழுவின் அங்கத்தவர்களுக்கு பாதுகாப்பு உடைகளை வழங்கி அவர்கள் மூலம் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் செயல்பாட்டை மேற்கொள்ள ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் றோய் பீரிஸ் தலைமையில் குறித்த பணியாளர்களுக்குரிய ஆலோசனைகள் வழங்கி வைக்கப்பட்டது.
இதனையடுத்து மன்னார் பேருந்து தரிப்பிட பகுதியில் தமது பணியை முன்னெடுத்தனர்.
மக்கள் உரிய முறையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுகின்றார்களா?, வர்த்தக நிலையங்களில், பேருந்துகள் போன்றவற்றில் மக்கள் உரிய சமூக இடை வெளியை பின் பற்றி முகக்கவசம் அணிந்தள்ளார்களா? என்பதை ஆராய்ந்தனர்.
அத்தோடு ,மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளையும் குறித்த இளைஞர் குழுவினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.