
இலங்கையின் தென் கடற்பரப்பில் மகா ராவணா வௌிச்ச வீட்டிலிருந்து கிழக்கே 480 கடல் மைல் தொலைவில் இந்து சமுத்திர பகுதியில் கொள்கலன் கப்பலொன்று தீ விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
கொழும்புத் துறைமுகத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் பயணித்த லைபீரியா நாட்டுக்கு சொந்தமான ‘எம்.எஸ்.சி மெசீனா’ கப்பலே இவ்வாறு தீ விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தக் கப்பலின் இயந்திரப் பிரிவில் நேற்று இரவு தீ ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தீயை கட்டுப்படுத்துவதற்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு தயாராகியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.