January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சேதனப் பசளை இறக்குமதி தற்காலிகமாக இடைநிறுத்தம்!

வெளிநாடுகளில் இருந்து சேதனப் பசளை இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

உள்ளூர் சேதனப் பசளை உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் எம். டபிள்யூ வீரகோன் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், 2021/2022 பெரும் போகத்தில் 500,000 ஹெக்டெயரில் நெல் பயிர்செய்கையை மேற்கொள்வதற்காக அரசாங்கத்தின் உர நிறுவனம் மூலம் சேதனப் பசளை மற்றும் இயற்கை கனிமங்களை இறக்குமதி செய்வதற்கான திட்டத்திற்கு இந்த மாத தொடக்கத்தில் அமைச்சரவை அனுமதி அளித்தது.

இதன்படி நாட்டில் சேதனப் பசளை பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கு இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளை பயன்படுத்துவதற்கும் இறக்குமதி செய்வதற்கும் அரசாங்கம் தடை விதித்தது.

அதன்படி, 2021/2022 பெரும் போகத்துக்குத் தேவையான சேதனப் பசளைகளை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை விவசாய அமைச்சு கண்டறிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.