July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

துமிந்த சில்வாவின் விடுதலைக்கு ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் கண்டனம்

மரண தண்டனைக் கைதி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் விடுதலைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில்;

“சக அரசியல்வாதியின் கொலைக்கு தண்டனை பெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்தா சில்வாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியமையானது,தேர்ந்தெடுக்கப்பட்ட, தன்னிச்சையாக மன்னிப்பு வழங்குவதற்கான மற்றொரு எடுத்துக்காட்டு என்றும் இது சட்டத்தின் ஆட்சியை பலவீனப்படுத்துகிறது மற்றும் பொறுப்புக்கூறலை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது”என ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் ட்வீட் செய்துள்ளது.