January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

துமிந்த சில்வா விடுதலை விவகாரம்: ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பும் ஐதேக!

மரண தண்டனை கைதியான துமிந்த சில்வாவுக்கு எந்த அடிப்படையில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது என்று ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, ஜனாதிபதியிடம் கேள்வியெழுப்பியுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

பாரத லக்‌ஷ்மன் பிரேமசந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த துமிந்த சில்வா, ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பில் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், அது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

கைதிகளுக்கு பொது மன்னிப்பை வழங்கும் போது அதற்கு தகுதியானவர்களை தெரிவு செய்வதற்கான முறைமை என்ன என்பதனையும், அந்த முறைமை துமிந்த சில்வா விடயத்தில் பின்பற்றப்பட்டதா என்றும் ஜனாதிபதி தெளிவுப்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை முறையற்ற வகையில் பொது மன்னிப்பு என்ற விடயத்தை பயன்படுத்தி நீதித்துறையை தவறாக கையாள வேண்டாம் என்று ஜனாதிபதியை கேட்டுக்கொள்வதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி  தெரிவித்துள்ளது.