July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘துமிந்த சில்வாவின் விடுதலை சட்டத்தின் ஆட்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் செயலாகும்’: அமெரிக்க தூதுவர்

மரண தண்டனைக் கைதி துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டதற்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் குற்றவாளியாக உறுதி செய்த ஒருவரை விடுதலை செய்வது இலங்கையின் சட்டத்தின் ஆட்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் செயலாகும் என்று அமெரிக்க தூதுவர் அலெய்னா பி டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

துமிந்த சில்வாவின் விடுதலை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியிலேயே, இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேநேரம், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை அமெரிக்க தூதுவர் வரவேற்றுள்ளார்.

பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான சம அணுகல் என்பன ஐநா நிலைபேரான இலக்குகளின் அடிப்படையாகும் என்று அமெரிக்க தூதுவர் நினைவுபடுத்தியுள்ளார்.