
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளைய தினம் (25) நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாளை (25) இரவு 8.30 மணிக்கு இவ்விசேட உரை இடம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் விசேட உரை அனைத்து தொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும் ஒளி, ஒலிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் அரசாங்கத்தின் விசேட தீர்மானங்கள் குறித்ததாக இந்த உரை காணப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.