January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

2020 உயர்தரப் பரீட்சை பெறுபேறு மீள்பரிசீலனைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்க சந்தர்ப்பம்

2020 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு விண்ணப்பங்களை இணையவழி ஊடாக மாத்திரம் விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (24) முதல் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி வரையில் இவ்வாறு விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, http://doenets.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசித்து விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பீ. சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

அத்துடன், பரீட்சைகள் திணைக்களத்தின் கையடக்கத் தொலைபேசி செயலியான ‘DoE’  ஊடாகவும் இதனை மேற்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப படிவத்துக்கான கட்டணமான 250 ரூபாயை இணைய வழியில் அல்லது தபாலகத்தில் செலுத்த முடியும் என்றும் கட்டணத்தை செலுத்திய பின்னர் விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நாட்டில் தற்போது நிலவும் கொவிட் தொற்று நிலை காரணமாக, இம்முறை பாடசாலை விண்ணப்பதாரிகளிள் விண்ணப்பங்களில், பாடசாலை அதிபர்களின் பரிந்துரை அல்லது கையொப்பம் அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.