மரண தண்டனைக் கைதி துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டமைக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் மனைவி கண்டனம் வெளியிட்டுள்ளார்.
முன்னாள் பாராளுமன் உறுப்பினர் பாரத லக்ஸ்மன் கொலை வழக்கிலேயே, துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.
துமிந்த சில்வாவை விடுதலை செய்த அரசாங்கத்தின் தீர்மானத்தைக் கண்டித்து, சுமனா பிரேமசந்திர சமூக வலைத்தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
‘கொலையாளி விடுதலை செய்யப்பட்டார், நீதியை மதிக்காத இந்த நாட்டில் சூரியன் உதிக்காது’ என்று சுமனா பிரேமசந்திரவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் தீர்ப்புகளை மதிக்காத நாடாக இலங்கை மாறியுள்ளதாகவும் சுமனா பிரேமசந்திர குற்றம்சாட்டியுள்ளார்.
பொசன் போயா தினம் போன்ற ஒரு சிறந்த நாளில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று பொது மன்னிப்பு வழங்கப்பட்ட துமிந்த சில்வா சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.