July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கணினி வைரஸ் தடுப்பு மென்பொருள் நிறுவனர் ஜோன் மெக்அபீ ஸ்பைன் சிறைச்சாலையில் மரணம்

மெக்அபீ கணினி வைரஸ் தடுப்பு மென்பொருள் நிறுவனர் ஜோன் மெக்அபீ ஸ்பைன் சிறைச்சாலையில் மரணம் அடைந்துள்ளார்.

ஜோன் மெக்அபீயை அமெரிக்காவிடம் ஒப்படைக்க ஸ்பைன் தேசிய நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியிருந்த நிலையில், அவர் சிறைச்சாலையில் மரணமடைந்துள்ளார்.

75 வயதுடைய மெக்அபீ தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும், அவரது உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் முயற்சித்தாலும் பயனளிக்கவில்லை என்று காடலான் நீதித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மெக்அபீ கணினி வைரஸ் தடுப்பு மென்பொருளை நிறுவிய அவர், பல பில்லியன் அமெரிக்க டொலர்களை இலாபமாகப் பெற்றிருந்தார்.

2020 ஓக்டோபர் மாதம் துருக்கி செல்லும் போது மெக்அபீ ஸ்பைனில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த நான்கு வருடங்களுக்கும் அரச வரி செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மெக்அபீ மீதான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்காக அமெரிக்காவுக்கு அவரை ஒப்படைக்க ஸ்பைன் நீதிமன்றம் நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்நிலையில், அவர் இன்று தற்கொலை செய்துகொண்டுள்ளார்.