தாய்லாந்து தூதரக காணியை போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சட்டத்தரணி கொழும்பு 7 இல் உள்ள தாய்லாந்து தூதரகத்துக்கு சொந்தமான 20 பேச்சர்ஸ் காணியை போலி ஆவணங்கள் தயாரித்து, 500 மில்லியனுக்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போலி ஆவணங்களை தயாரிக்கும் இருவரே ஆரம்பமாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போதே, தாய்லாந்து தூதரகத்துக்கு சொந்தமான 20 பேச்சர்ஸ் காணியும் போலி ஆவணங்கள் தயாரித்து, விற்பனை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
பொலிஸார் சந்தேகநபரான சட்டத்தரணியை கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.