கொவிட் நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டு மக்களுக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிச்சயமாக நிவாரணங்களை வழங்கும் என்று இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இருந்து பஸில் ராஜபக்ஷ இன்று நாடு திரும்பிய நிலையில், அது குறித்து ஊடகங்களுக்கு கருத்து கூறும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பஸில் ராஜபக்ஷ நாட்டுக்கு வந்துள்ளார். அவர் ஊடாக மக்களுக்கு நிவாரணங்கள் கிடைக்குமா? என்று ஊடகவியலாளர்கள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவிடம் கேட்டனர்.
இதற்கு பதிலளித்த அவர், மக்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றோம். தற்போது பஸில் ராஜபக்ஷ நாட்டுக்கு வந்துள்ளார். அவர் ஊடாக அது கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
இதேவேளை மகிந்த ராஜபக்ஷ காலத்தில் பஸில் ராஜபக்ஷ நாட்டின் பொருளாதாரத்தை சிறப்பாக கொண்டு சென்றார். அதேபோன்று நாட்டின் அபிவிருத்தியையும் முன்னெடுத்தார் என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.