January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கை ஜீஎஸ்பி வரிச் சலுகையை இழக்கும் சவாலை எதிர்கொள்ளத் தயாராகிறது’: நிதி இராஜாங்க அமைச்சர்

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீஎஸ்பி வரிச் சலுகையை நீக்கும் சவாலை எதிர்கொள்ள இலங்கை அரசாங்கம் தயாராகுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஜீஎஸ்பி வரிச் சலுகையை இழக்கும் நிலைமை ஏற்படாமல் தவிர்த்துக்கொள்வதற்கான இராஜதந்திர முயற்சிகளில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வரிச் சலுகை நீக்கப்படும் போது எதிர்கொள்ள நேரிடும் சவால்களையும் விளைவுகளையும் அரசாங்கம் மதிப்பாய்வு செய்ய ஆரம்பித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக நாட்டில் வருவாய் இழப்பு ஏற்பட்டிருந்தாலும், தாம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த முயற்சிப்பதாகவும் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

அரசாங்கமும் மத்திய வங்கியும் இணைந்து நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் என்ற உறுதிப்பாட்டை ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்களுக்கு தாம் வழங்குவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.