
கொழும்பு, புறக்கோட்டை போதிராஜ மாவத்தை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற தீ விபத்தில் இரண்டு வர்த்தக நிலையங்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
பாடசாலை உபகரணங்கள் விற்பனை செய்யப்படும் வர்த்தக நிலையங்களிலேயே இவ்வாறு தீ பரவியுள்ளளது.
கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள போதும், குறித்த வர்த்தக நிலையங்களில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ பரவியமைக்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. சம்பவம் தொடர்பில் புறக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.