மரண தண்டனைக் கைதி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, விசேட ஜனாதிபதி பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலைச் சம்பவத்தில், கொழும்பு மேல் நீதிமன்றம் 2016 ஆம் ஆண்டு துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனைத் தீர்ப்பளித்தது.
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை விடுவிக்க பரிந்துரைத்திருந்தது.
இன்று பொசன் தினத்தை முன்னிட்டு 93 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி விசேட பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.