June 17, 2025 20:53:37

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழ் அரசியல் கைதிகள் 16 பேர் விடுதலை செய்யப்பட்டனர்

File Photo

இலங்கையில் பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 93 சிறைக்கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின்  ஆணையாளரும், ஊடகப் பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களில், நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப் புலி இயக்க சந்தேக நபர்கள் 16 பேர் உள்ளடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை விடுதலை செய்யப்பட்ட மற்றைய 77 பேரும் சிறிய குற்றங்கள் தொடர்பில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்தவர்கள் என்று சந்தன ஏக்கநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.