கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் தெளிவான திட்டமொன்று அரசாங்கத்திடம் இல்லாத காரணத்தினாலேயே நாளுக்கு நாள் கொவிட் வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளதெனவும், சகல பக்கமிருந்தும் மலையக மக்களுக்கு பிரச்சினைகள் வந்தால், அந்த மக்கள் எவ்வாறு அவற்றை சமாளிப்பார்களெனவும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் நிலைமைகளால் மலையக மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது.கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான திட்டங்கள் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை.இதனாலேயே தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.மலையக பகுதிகளில் லயன்களில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை காரணமாக கொரோனா வைரஸ் மலையக பகுதிகளில் வேகமாக பரவுகிறது எனவும் அவர் கூறினார்.
தொழிலாளர்களுக்கு மூன்று நாள் வேலைகளே வழங்கப்படுகின்றன. இந்த மூன்று நாள் வேலையிலும் தொழிலாளர்கள் 20 கிலோ கொழுந்து பறிக்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.பெருந் தோட்டங்களை பெருந் தோட்ட நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான வகையில் நிர்வகிக்கிறார்கள்.இரசாயன உரங்களை பயன்படுத்த விதிக்கப்பட்டிருக்கும் தடையின் பாதிப்பையும் தொழிலாளர்கள் முகங்கொடுக்கின்றனர் எனவும் அவர் மேலும் கூறினார்.