
பிச்சைக்காரனின் காயத்தை சுகமாக்க செல்லும் போது அந்தப் பிச்சைக்காரன் குழப்பமடைவதை போன்றே அரசியல் கைதிகளின் பிரச்சினைகளை தீர்க்க முயற்சிக்கும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் குழப்பமடைந்து நடந்து கொள்கின்றனர் என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.\
பாராளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சபையில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியொருவர் தான் 11 வருடங்களாக செய்த வேலைகள் தொடர்பாக கூறினர்.அவர்கள நீண்ட காலமாக கேட்டு வந்தவை இப்போது நடக்கப் போகும் போது, பிச்சைக்காரனின் காயத்தை சுகமாக்க முயற்சிக்கையில்,அந்த பிச்சைக்காரன் சிலவேளை குழப்பம் அடைவார்.அதேபோன்றே இன்றும் அவர் சபையில் குழப்பமடைந்து பேசியதை அவதானிக்க முடிந்தது.
காயத்தை வைத்து அவர்கள் தமது அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும் என்பதனால் அவர்கள் குழப்பமடைவது வழமையானதே.இந்த பிரச்சினையை தீர்த்தால் உங்களின் எதிர்காலமும் இல்லாமல் போய்விடும் என்று எங்களுக்கு தெரியும். உங்களின் முழு எதிர்காலமும் பிச்சைக்காரனின் காயத்தை போன்றே உள்ளது.இதனால் உங்களுக்கு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விருப்பமில்லை என்றார்.