July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இல்லாது போனால் 2 பில்லியன் டொலர் பறிபோகும்; இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர

நீண்ட காலமாக தடுப்புக் காவலில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை பெற்றுக் கொள்வதற்காக அல்ல என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர், ஆனால் எமக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இல்லாது போனால் 2 பில்லியன் டொலர் பறிபோகும் எனவும் கூறினார்.

ஆரம்பத்தில் நாட்டின் வரிகள் குறைக்கப்பட்டன.புதிய வியாபாரங்கள் பல உருவாகும் என்ற நம்பிக்கையில் அதனை செய்தோம். ஆனால் கொரோனா காரணமாக எமது எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை.

இதனால் எமக்கு 600 பில்லியன்  நட்டம் ஏற்பட்டுள்ளது. ஆகவே மீண்டும் வரிகளை கூட்டுவதால் நிலைமைகளை சரிசெய்ய முடியாது. நாட்டுக்குள் பாரிய அளவிலான டொலர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றார்.

அதேபோல் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து நாம் தொடர்ச்சியாக குரல் எழுப்பி வந்தோம். எந்தவித குற்றச்சாட்டும் இல்லாத நபர்களை விடுவிக்க வேண்டும் என நாம் பேசினோம்.

ஏற்கனவே 12 ஆயிரம் பேர் புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். அதேபோல் இப்போதுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.