
பட்டதாரி பயிலுநர்கள் 18 ஆயிரம் பேரை நாட்டின் பின்தங்கிய பிரதேசங்களில் ஆசிரியர்களாக நியமிக்க கல்வி அமைச்சு அனுமதி அளித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வேண்டுகோளின் பேரில், பொதுச் சேவைகள் அமைச்சு கல்வி அமைச்சிடம் முன்வைத்த முன்மொழிவுக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, பின்தங்கிய கிராமங்களில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்ற பாடசாலைகளுக்கு இந்தப் பட்டதாரி பயிலுநர்கள் நியமிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.