February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரிட்டிஷ் காலத்தில் தடை செய்யப்பட்ட இலங்கையின் தற்காப்புக் கலையை அனுமதிக்க நடவடிக்கை

பிரிட்டிஷ் காலத்தில் தடை செய்யப்பட்ட இலங்கையின் ‘அங்கம்பொர’ தற்காப்புக் கலையை மீண்டும் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

‘அங்கம்பொர’ தற்காப்புக் கலையை சட்ட ரீதியாக அனுமதிக்க வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிடுவது குறித்து தான் கவனம் செலுத்துவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார்.

நவகமுவ, கொரதொட்ட பகுதியில் உள்ள தற்காப்புக் கலை பயிற்சி நிலையம் ஒன்றுக்கு களப் பயணமொன்றை மேற்கொண்ட போதே, அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பாரம்பரிய, மரபு வழி தற்காப்புக் கலையான ‘அங்கம்பொர’ பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தடை செய்யப்பட்டதாகவும் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார்.

This slideshow requires JavaScript.