இலங்கையில் கொவிட் தொற்று அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை உடனடியாக திறக்க முடியாத நிலைமையே காணப்படுவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலைமையில் அவசரப்பட்டு பாடசாலைகளை திறப்பது மாணவர்களுக்கு சுகாதார ரீதியிலான பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் விசேட நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்று பாடசாலைகளை திறக்கும் நாட்கள் தொடர்பாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமையினால் மாணவர்களுக்கு இணைய வழியில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம் என்றும், இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற கொவிட் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான விவாதத்தில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.