அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் அடிப்படை உரிமை மீறல் வழக்கு விசாரணையில் இருந்து மூன்றாவது நீதியரசரும் விலகிக்கொண்டுள்ளார்.
உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ், தனது தனிப்பட்ட காரணங்களுக்காக வழக்கு விசாரணையில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் அடிப்படை உரிமை மீறல் வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே, நீதியரசர் நவாஸ் இதனை அறிவித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட மூவர் கொண்ட நீதியரசர் குழாமில் இருவர் ஏற்கனவே விலகிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 5 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.