
பாடசாலை மாணவர்கள் இலகு கட்டண முறையில் தொலைபேசிகளைக் கொள்வனவு செய்யும் நடைமுறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே, கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
வறிய மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இந்த வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவலோடு பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இணையவழியில் நடைபெறுகிறது.
இணையவழி கல்வியைத் தொடர வசதியற்ற மாணவர்களின் கல்வி வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில், கல்வி அமைச்சு இப்புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.