பல ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் ஏழு பேர் விடுதலை செய்யப்படவுள்ளனர் என சிறைச்சாலை முகாமைத்துவ மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தையை மேற்கோள் காட்டி டெய்லி மிரர் ஆங்கிலப் பத்திரிகை இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் பொசன் பௌர்ணமி தினமான நாளைய தினம் (24) அவர்கள் விடுவிக்கப்படவுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.