January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கைக்கு முதல் தடவையாக கிடைக்கவுள்ள 78 ஆயிரம் பைசர் தடுப்பூசிகள்!

இலங்கைக்கு 78 ஆயிரம் பைசர் கொவிட் தடுப்பூசிகள் அமெரிக்காவிடமிருந்து கிடைக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இந்த தடுப்பூசிகள் எதிர்வரும் ஜூலை மாதத்தின் முதல் 3 வாரங்களில் இலங்கையை வந்தடையும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கைக்கு அமெரிக்காவிடமிருந்து கிடைக்கும் முதல் தொகுதி பைசர் தடுப்பூசிகள் இதுவாகும்.

இதேவேளை, ஜூலை முதல் வாரத்தில் மேலும் 20 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கை வந்தடையவுள்ளது.

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட சினோபார்ம் தடுப்பூசிகளே இவ்வாறு நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.