
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு 48 மில்லியன் ரூபாய் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது.
எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
கப்பல் விபத்தின் கழிவுப் பொருட்கள் கடலில் கலந்ததால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள 15 ஆயிரம் பேருக்கு ஐரோப்பிய ஒன்றியம் மனிதாபிமான உதவிகளை வழங்கவுள்ளது.
குறித்த பிரதேசங்களில் உள்ள சிறிய மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்களுக்கு இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக உதவிகள் பகிர்ந்தளிக்கப்பட உள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவிகள் கப்பல் விபத்தால் சேதமடைந்துள்ள கடற்கரைகளை சீர்செய்வதற்கும் பயன்படுத்தப்படவுள்ளது.