அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி எம்பிக்கள் பாராளுமன்றத்திற்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சபைக்குள் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சி இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளது.
இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் பாராளுமன்றம் கூடியதை தொடர்ந்து, ரணில் விக்கிரமசிங்க எம்.பியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட பின்னர், சபையின் தினப் பணிகள் ஆரம்பமானது.
இதன்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு எதிரான கோசங்களை எழுப்பியவாறு, பதாதைகளை ஏந்தி சபைக்கு நடுவில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.