இலங்கை முழுவதும் இன்று இரவு 10 மணி முதல் மீண்டும் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படவுள்ளது.
மே 21 ஆம் திகதி முதல் அமுலில் இருந்த பயணக் கட்டுப்பாடு ஒரு மாதத்தின் பின்னர் ஜுன் 21 ஆம் திகதி தளர்த்தப்பட்டது.
இந்நிலையில் நாளை பௌர்ணமி விடுமுறை தினம் என்பதனால் அதன்போது பயணக் கட்டுப்பாட்டை விதிப்பதற்கு கொவிட் தடுப்புச் செயலணி தீர்மானித்துள்ளது.
இதன்படி இன்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் 30 மணித்தியாலங்களுக்கு பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வாரஇறுதி நாட்களில் பயணக் கட்டுப்பாட்டை அமுல்படுத்துவதா? இல்லையா? என்பது தொடர்பாக நாளைய தினத்தில் கொவிட் தடுப்புச் செயலணி தீர்மானம் எடுக்கவுள்ளது.
நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும் மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.