January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்; ரவூப் ஹக்கீம்

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான நெருக்கடி நிலைமைகள் காரணமாகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரும் பாரதூரமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதனால் எமக்கு ஜி.எஸ்.பி.சலுகையும் இல்லாது போகும் நிலை உருவாகியுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் அவர் இதனை சுட்டிக்காட்டியிருந்தார்.

இதன்போது ஒழுங்கு பிரச்சினை எழுப்பிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்,அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் கருத்தை நாம் வரவேற்கிறோம்.பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பலர் தண்டிக்கப்பட்டு வருகின்றனர்.குறிப்பாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லா போன்றவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை தவறாக பயன்படுத்துகின்றமை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரும் பாரதூரமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.இதனால் எமக்கு ஜி.எஸ்.பி. சலுகையும் இல்லாது போகும் நிலை உருவாகியுள்ளது. எனவே இது குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் என கூறினார்.